வேப்ப மரத்தில் பால்: பக்தர்கள் வழிபாடு!
ADDED :4049 days ago
அரூர்:அரூர் அருகே வேப்பமரத்தில் பால் வடிந்ததையடுத்து, பக்தர்கள் பூஜை செய்து வழிபட்டனர்.அரூர் அடுத்த ஒடசல்பட்டியை சேர்ந்தவர் சரோஜா. இவரது விவசாய நிலத்தில், வேப்பமரம் உள்ளது. இதில், கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் பால் வடிந்து வந்தது. இதுகுறித்து கேள்விப்பட்ட, அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பக்தர்கள், நேற்று வேப்ப மரம் உள்ள பகுதியில் குவிந்தனர். வேப்பமரத்தில் பால் வடிவதை கண்ட அவர்கள், வேப்ப மரத்துக்கு சிறப்புபூஜை செய்து வழிபட்டனர்.