உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்தலசயன பெருமாள் கோவில் உண்டியல் வசூல் ரூ.5.54 லட்சம்!

ஸ்தலசயன பெருமாள் கோவில் உண்டியல் வசூல் ரூ.5.54 லட்சம்!

மாமல்லபுரம்: மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவில் உண்டியல்களில், 5.54 லட்சம் ரூபாய் வசூலானது. மாமல்லபுரம், ஸ்தலசயன பெரு மாள் கோவில், 108 வைணவ தலங்களில், 63வது தலமாக விளங்குகிறது. இத்தலம், இறைவன் தரையில் படுத்து அருள்புரிகின்ற நிலையில், நிலம்  மற்றும் வீடு கட்டுதல் தொடர்பான தோஷ பரிகாரத் தலமாக புகழ்பெற்றது. இக்கோவிலில், பக்தர்கள் காணிக்கை செலுத்த, இரு உண்டியல்கள்  உள்ளன. அவை, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை திறக்கப்பட்டு, காணிக்கை எண்ணப்படுவது வழக்கம். இதற்கு முன், கடந்த பிப்., 5ம் தேதி,  உண்டியல் திறக்கப்பட்டது. ஆறு மாதங்களுக்கான காணிக்கையாக, 2.70 லட்சம் ரூபாய் வசூலானது. அதைத் தொடர்ந்து, கடந்த, 10 மாதங்களாக  திறக்கப்படாமல் இருந்த உண்டியல்களை, காணிக்கை தொகை அதிகரித்திருக்கலாம் என கருதி, துறை உதவி ஆணையர் மோகனசுந்தரம்  முன்னிலையில், நேற்று முன்தினம் உண்டியல்கள் திறக்கப்பட்டன. பிப்., 6ம் தேதி முதல், டிச., 8ம் தேதி வரை, 5,54,899 ரூபாய், காணிக்கையாக  கிடைத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !