உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வடிவுடையம்மன் கோவில் தெப்பக்குளத்தில் கழிவுநீரை விடும் லாரி!

வடிவுடையம்மன் கோவில் தெப்பக்குளத்தில் கழிவுநீரை விடும் லாரி!

திருவொற்றியூர்: வடிவுடையம்மன் கோவில் தெப்பக்குளத்தில், சாலையில் தேக்கமடைந்த கழிவுநீர் கலந்த மழைநீரை விடுவதற்கு, பக்தர்கள் கடும்  எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில், வெளிப்புறம், மிகப் பெரிய தெப்பக் குளமும், உள்புறம், சிறிய தெப் பக் குளமும் உள்ளன. குளங்களுக்கு செல்லும் மழைநீர் வடிகால்கள், சன்னிதி தெருவில் இரண்டும், வடக்கு மாடவீதியில் ஒன்றும் என, மூன்று  உள்ளன. இந்த வடிகால்வாய் வழியாக, சாக்கடை தண்ணீர் வருவதால், பெரிய தெப்பக்குளத்திற்கு செல்லும் பாதை மூடப்பட்டுவிட்டது. இந்த  நிலையில், சாலையில் தேக்கமடைந்த கழிவுநீர் கலந்த மழைநீர் மாநகராட்சி லாரிகளில் நிரப்பப்பட்டு, கோவில் குளத்தில் விடப்படுகிறது.

இதற்கு பக்தர்களும், பகுதிவாசிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, பகுதிவாசிகள் கூறுகையில்,திருவொற்றியூரில் பாதாள  சாக்கடை திட்டம் நடைமுறைக்கு வராததால், வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களிலிருந்து சாக்கடையை சாலையில் தான் விடுகின்றனர். இந்த  நிலையில், சாலையில் தேக்கமடைந்த மழைநீர் என்ற பெயரில் லாரியில் எடுத்து, கோவில் குளத்தில் விட்டால், குளத்தின் புனிதத்தன்மை கெடாதா.  குளத்தில் மழைநீரை விடுவதை தடுக்க வேண்டும்’ என்றனர். இதுகுறித்துஇ கோவில் நிர்வாகி ஒருவர் கூறுகையில்,பக்தர்கள் கோரிக்கையை ஏற்று,  சாலையில் தேக்கமடைந்த கழிவுநீரை கோவில் குளத்தில் விடக்கூடாது  என, மாநகராட்சிக்கு அறிவுறுத்தினோம். ஆனால், தொடர்ந்து லாரியில்  மழைநீரை பிடித்து விடுகின்றனர். இதுகுறித்து மாநகராட்சிக்கு மீண்டும் தகவல் கொடுத்துள்ளோம்’ என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !