உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குமார கோயிலுக்கு சொந்தமானரூ.2 கோடி நிலம் மீட்பு

குமார கோயிலுக்கு சொந்தமானரூ.2 கோடி நிலம் மீட்பு

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருக்கோயில்களில் ஒன்று வேளிமலை குமாரகோயில். இந்த கோயிலுக்கு சொந்தமான நிலம் கல்குளம் கிராமத்தில் உள்ளது. இந்த நிலத்தை சில தனியார்கள் ஆக்கிரமித்து வைத்திருந்தனர். 19 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த நிலத்தின் ஒரு பகுதி தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து பத்மனாபபுரம் தேவசம் தொகுதி கண்காணிப்பாளர் ஜீவானந்தம், நில அளவை அலுவலர் அய்யப்பன், வேளிமலை மேலாளர் சிவகுமார் ஆகியோர் நிலத்தை அளந்தனர். ஆக்கிரமிப்பில் இருந்த 90 சென்ட் நிலம் மீட்கப்பட்டது. இதன் மதிப்பு ஒரு கோடியே 90 லட்சம் ரூபாய் ஆகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !