உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முகாசபரூர் விஸ்வநாதர் கோவிலில் குரு பூஜை!

முகாசபரூர் விஸ்வநாதர் கோவிலில் குரு பூஜை!

மங்கலம்பேட்டை: முகாசபரூர் அன்னபூரணி உடனுறை விஸ்வநாதர் கோவிலில் கோரக்க சித்தர் ஜீவ சமாதியில் குரு பூஜை விழா நடந்தது. மங்கலம்பேட்டை அடுத்த முகாசபரூர் அன்னபூரணி உடனுறை விஸ்வநாதர் கோவிலில் கோரக்க சித்தர் குருபூஜை விழா நடந்தது. இதையொட்டி   11ம் தேதி காலை 7:00 மணிக்கு சிறப்பு தீபாராதனை, காலை 10:00 மணிக்கு குருபூஜை மற்றும் சிறப்பு யாகம் நடந்தது. தொடர்ந்து பகல் 12:00   மணிக்கு கோரக்க சித்தர் ஜீவ சமாதியில் சந்தனம், பழம், பால், இளநீர், தயிர் போன்ற பொருட்களால் சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. பகல்   2:00 மணியளவில் அன்னதானம் நடந்தது. விழாவில், ஊராட்சித் தலைவர்கள் பாலதண்டாயுதம், வேல்முருகன் மற்றும் ஏராளமான கிராம மக்கள்   தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !