பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில் சுந்தரகாண்ட பாராயணம்
ADDED :3961 days ago
திருவள்ளூர்: திருவள்ளூர், விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில், சனி பெயர்ச்சியை முன்னிட்டு, விசேஷ பூஜைகள் நடைபெற உள்ளது. வரும் 16ம் தேதி, சனி பகவான், துலாம் ராசியை விட்டு விலகி, விருச்சிக ராசிக்குள் பிரவேசிக்கிறார். இதை முன்னிட்டு, திருவள்ளூர், தேவி மீனாட்சி நகர், விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில், விசேஷ பூஜைகள் நடைபெற உள்ளது. சனிபகவானால் ஏற்படக்கூடிய சிரமங்களிலிருந்து விடுபட, ஆஞ்சநேயர் வழிபாடு சிறந்தது. குறிப்பாக, சுந்தரகாண்ட பாராயணம் மிகச்சிறந்தது என்பதால், வரும் 20ம் தேதி வரை, சுந்தரகாண்ட பாராயணம் நடைபெறுகிறது.