திருநள்ளாரு சனிப்பெயர்ச்சி விழாவிற்கு சிறப்பு பஸ்கள்!
ADDED :3960 days ago
புதுச்சேரி: சனிப்பெயர்ச்சி விழாவை முன்னிட்டு, புதுச்சேரி சாலை போக்குவரத்து கழகம் சார்பில், திருநள்ளாருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. இது குறித்து புதுச்சேரி சாலை போக்குவரத்து கழக தலைவர் ஞானசேகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநள்ளாரில், வரும் 16ம் தேதி சனிப் பெயர்ச்சி விழா நடக்கிறது. இதனை முன்னிட்டு, புதுச்சேரி சாலை போக்குவரத்து கழகம் (பி.ஆர்.டி.சி.) சார்பில், பயணிகளின் வசதிக்காக, பெங்களூரு, திருப்பதி, நாகர்கோவில், கோயம்புத்துார், நெய்வேலி, மயிலாடுதுறை, சிதம்பரம் மற்றும், புதுச்சேரியில் இருந்து திருநள்ளாருக்கு சிறப்பு பஸ்கள், வரும் 15 மற்றும் 16ம் தேதிகளில் இயக்கப்பட உள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.