தினமலர் இணைய தளத்தில் மார்கழி இசைத் திருவிழா நேரடி ஒளிபரப்பு!
இணையதள வரலாற்றில் முதன்முறையாக 400க்கும் மேற்பட்ட இசை நிகழ்ச்சிகளைக் கண்டுகளிக்க ஒரு அரிய வாயப்பு. நூற்றுக்கும் மேற்பட்ட கலைஞர்களின் இசை நிகழ்ச்சிகளை தினமலர் இணையதளம் நேரடியாக ஒளிபரப்புகிறது. சென்னையில் நடைபெறும் மார்கழி மாத இசை கச்சேரிகளை அடுத்த மாதம் முதல் வாரம் வரை உலகம் முழுவதும் உள்ள இசை ஆர்வலர்கள் கண்டு, கேட்டு ரசிக்கலாம்.
உலகம் முழுவதும் உள்ள 210க்கும் மேற்பட்ட நாடுகளிலும் தமிழர்கள் தினமலர் இணையதளத்தை தொடர்ந்துபார்த்து, படித்து வருகின்றனர். இந்த நேரடி இசை நிகழ்ச்சி ஒளிபரப்பை அனைவரும் கண்டு களிப்பதுடன் உங்கள் நண்பர்களுக்கும் இது குறித்து எடுத்துச் சொல்லுங்கள். உங்கள் கருத்துக்களையும் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
கின்னஸ் சாதனை: சென்னையில் கடந்த 50 ஆண்டுகளாக இசைவிழா நடைபெற்று வருகிறது. நகரின் 20 இடங்களில் உள்ள 100க்கும் மேற்பட்ட சபாக்களில் மொத்தம் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கச்சேரிகள். நடனங்கள் நடைபெற உள்ளன. இவை அனைத்தையும் உங்களுக்கு நேரடியாக ஒளிபரப்ப தினமலர் இணையதளம் முன்வந்துள்ளது. தற்போதைய தொழில் நுட்ப வளர்ச்சியில் ஒரே நேரத்தில் பல இடங்களில் நடக்கும் நிகழ்ச்சிகளை ஒரே இடத்தில் ( தினமலர் இணையதளத்தில்) பார்க்க, கேட்க வசதி செய்து தரப்பட்டுள்ளது. இது ஒரு கின்னஸ் சாதனையாக கருதப்படுகிறது. உங்கள் தினமலர் இணையதளத்தின் இந்த முயற்சியை வாசகர்கள் வரவேற்று முழு ஒத்துழைப்பு தருவார்கள் என எதிர்பார்க்கிறோம்.