மகா கால பைரவர் ஜெயந்தி விழா!
ADDED :3955 days ago
ஊத்துக்கோட்டை: மகா கால பைரவர் ஜெயந்தி விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமியை தரிசனம் செய்தனர். ஊத்துக்கோட்டை அடுத்த, தொம்பரம்பேடு கிராமத்தில் உள்ளது மகா கால பைரவர் கோவில். இக்கோவிலில், நேற்று காலை 5:00 மணிக்கு, பைரவர் கலச ஸ்தாபனம், கணபதி பூஜையுடன் துவங்கியது.காலை 7:00 மணிக்கு, கலச புறப்பாடு, 64
கலசத்திற்கு அபிஷேகம், சுவாமிக்கு வெள்ளிக்காப்பு சாற்றி, சிறப்பு பூஜைகளுடன், பைரவ பீஜாஷ்ர ஹோமம் நடந்தது. காலை முதல் மாலை வரை, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பிற்பகல் 3:00 மணிக்கு, மஹா பூர்ணாஹூதி, பொங்கல் வைத்தல் நிகழ்ச்சி நடந்தது. மதியம், மீண்டும் மூலவர் பைரவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை மற்றும் மகா தீபாராதனை நடந்தது.