உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமலையில் புத்தாண்டு தரிசனம்பரிந்துரை கடிதங்களுக்கு அனுமதி ரத்து!

திருமலையில் புத்தாண்டு தரிசனம்பரிந்துரை கடிதங்களுக்கு அனுமதி ரத்து!

திருப்பதி:திருமலையில், வைகுண்ட ஏகாதசி அன்று, பரிந்துரை கடிதங்களுக்கு அனுமதி ரத்து செய்யப்படும், என, தேவஸ்தான செயல் இணை அதிகாரி சீனிவாச ராஜு தெரிவித்தார்.

புத்தாண்டு தினம் மற்றும் வைகுண்ட ஏகாதசி, ஒரே நாளில் வருவதால், அன்று திருமலை ஏழுமலையானை தரிசிக்க, சாதாரண பக்தர்களுடன், வி.ஐ.பி.,க்களும் அதிக அளவில் வருவர். அதனால், கடந்த ஒரு மாதமாக, தேவஸ்தானம், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், தேவஸ்தான செயல் இணை அதிகாரி சீனிவாச ராஜு, நேற்று முன்தினம் கூறியதாவது:புத்தாண்டு தினமும், வைகுண்ட ஏகாதசியும் ஒரே நாளில் வருவதால், ஏழுமலையானை தரிசிக்க அதிக பக்தர்கள் வருவர். எனவே, அன்று திருமலைக்கு வரும் வி.ஐ.பி.,க்களுடன், 3 பேர் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர்.

பரிந்துரை கடிதங்களுக்கு, ஜனவரி 1, 2ம் தேதிகளில், அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. திருமலைக்கு வரும் பக்தர்கள் அனைவரும், தர்ம தரிசனத்தில் மட்டுமே ஏழுமலையானை தரிசிக்க அனுமதிக்கப்படுவர்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !