உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் டிச.27ல் மண்டலபூஜை!

ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் டிச.27ல் மண்டலபூஜை!

கீழக்கரை : திருப்புல்லாணி அருகே ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் டிச., 27 ல் மண்டல பூஜை நடைபெறுகிறது.

வரும் டிச., 18 ல் காலை 6:00 மணியளவில் காப்புகட்டுதலுடன் மண்டல பூஜை, துவங்குகிறது. மண்டல பூஜை நடைபெறும் டிச., 27 ல் காலை 5 மணிக்கு கணபதி ஹோமம் நடைபெறுகிறது. பின்னர் முத்துநாச்சியம்மன் ஆலயத்தில் இருந்து பேட்டை துள்ளல் ஆரம்பமாகி வல்லபை கோயிலின் பின்புறமுள்ள பஸ்மக்குளத்தில் நீராடி உற்சவரை தாம்பூலத்தட்டில் வைத்து மஞ்சள் நீரால் ஆராட்டு விழாவும் நடைபெறும்.அதன்பின், மூலவருக்கு மகா அபிஷேக ஆராதனை, பஜனை, அன்னதானம் நடக்கிறது. மாலை 4 மணியளவில் சுவாமி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.இக்கோயிலில் ஒவ்வொரு ஆங்கில மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமையில் உலக நன்மைக்கான கூட்டுவழிபாடும், அன்னதானமும் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை குருசாமி மோகன்சாமி, வல்லபை ஐயப்பா சேவை நிலைய அறக்கட்டளையினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !