உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குச்சனூரில் இன்று சனிப்பெயர்ச்சி விழா!

குச்சனூரில் இன்று சனிப்பெயர்ச்சி விழா!

சின்னமனூர் : குச்சனூர் சனீஸ்வரபகவான் கோயிலில், சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு பக்தர்கள் சிரமமின்றி சுவாமி தரிசனம் செய்ய விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

குச்சனூரில் பிரசித்தி பெற்ற சுயம்பு சனீஸ்வர பகவான் கோயில் உள்ளது. இன்று நடைபெறவுள்ள சனிப்பெயர்ச்சி விழாவை முன்னிட்டு, மூலவருக்கு சிறப்பு பூஜைகளும், ஆராதனைகளும் நடைபெறுகிறது. மேஷம், ரிஷபம், சிம்மம், துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்காரர்கள் இந்த சனிப்பெயர்ச்சியில் பரிகார பூஜை செய்தால் நல்லது. நூறு ரூபாய் பணம் செலுத்தினால் அவர்களின் பெயருக்கு சிறப்பு பரிகார பூஜை செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதுவரை 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் முன்பதிவு செய்துள்ளனர். சனிப்பெயர்ச்சி நடைபெறும் இன்று பகல் 2.45 மணிக்கு நடைபெறும் சிறப்பு பூஜைகளை பக்தர்கள் நேரடியாக பார்ப்பதற்காக கோயில் வளாகத்தில் இரண்டு எல்.இ.டி., திரை அமைக்கப்பட்டுள் ளது.

பக்தர்கள் பாதுகாப்பாக தரிசனம் செய்வதற்காக 5 இடங்களில் சி.சி.டிவி., கேமரா பொறுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. கோயில் எதிரேயுள்ள சுரபி நதியில் நீராடி எள் விளக்கு ஏற்றுவது ஐதீகம். பக்தர்கள் கோயிலுக்கு வருவதற்கு வசதியாக போடி, தேவாரம், கம்பம், போடியிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !