காசி விஸ்வநாதருக்கு 108 சங்காபிேஷகவிழா!
ADDED :4089 days ago
வால்பாறை : வால்பாறை காசிவிஸ்வநாதருக்கு 108 சங்காபிேஷக பூஜை நடந்தது.வால்பாறை
சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் எழுந்தருளியுள்ள காசிவிஸ்வநாதருக்கு, இந்த ஆண்டு முதல் கார்த்திகை மாதம் ஒவ்வொரு திங்கள் கிழமையும், 108 சங்காபிேஷகம்,
நடைபெறுகிறது.இதையொட்டி நடந்த சங்காபிேஷகவிழாவில் காசிவிஸ்வநாதருக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பின்னர் 108 சங்காபிேஷகம் நடந்தது. தொடர்ந்து சிவபெருமானுக்கு தாமரைமலர்களால் அலங்கரிக்கப்பட்ட சங்கை பக்தர்கள் கையில் ஏந்தி, கோவிலை வலம் வந்த பின்னர் சிறப்பு அபிேஷகம் செய்யப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் காசிவிஸ்வநாதர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.