புவனகிரி சனிப்பெயர்ச்சி சிறப்பு யாகம்!
ADDED :4089 days ago
புவனகிரி கைலாசநாதர் கோவிலில் சனி பெயர்ச்சியை முன்னிட்டு சனீஸ்வரன் கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.புவனகிரி செட்டித்தெருவில் உள்ள ஸ்ரீ குபேர வினாயகர், ஸ்ரீ கல்யாண சுந்தரி சமேத ஸ்ரீ கைலாசநாதர் கோவில் வளாகத்தில் உள்ள சனீஸ்வரர் கோவிலில் சனிப்பெயர்ச்சி சிறப்பு பூஜை நடந்தது.முன்னதாக கோவில் வளாகத்தில் வேத விற்பன்னர்களைக் கொண்டு கும்பம் வைத்து சிறப்பு யாகம் நடந்தது. அதனைத் தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள சனீஸ்வரன் கோவிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது.சனிப்பெயர்ச்சி விழாவில் செட்டித்தெரு மற்றும் அதனைச் சுற்றியுள்ள தெருக்களிலிருந்து திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை ஆயிரவைசிய சமூகத்தினர் செய்திருந்தனர்.