உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அய்யப்பன் சுவாமி மண்டல பூஜை!

அய்யப்பன் சுவாமி மண்டல பூஜை!

பெங்களூரு: சிவன்ஷெட்டி கார்டன், சபரி அய்யப்பன் பஜனை சபா சார்பில், 27ம் ஆண்டு மண்டல பூஜை, நேற்று துவங்கியது.

தேர் ஊர்வலம்: சிவன்ஷெட்டி கார்டன், சபரி அய்யப்பன் பஜனை சபா சார்பில், 27ம் ஆண்டு மண்டல பூஜையை ஒட்டி, 2015 ஜன., 14ம் தேதி வரை, தினமும், இரவு, 7:30 மணியிலிருந்து, 8:30 மணி வரை, பஜனை நடைபெறும். பிரதி வாரம், சனிக்கிழமை, காலை, அய்யப்ப சுவாமிக்கு அபிஷேகமும், வரும், 20ம் தேதி மாலை, அய்யப்பன் தேர் ஊர்வலமும் நடைபெறும். வரும், 23ம் தேதி, மாலை, திருவிளக்கு பூஜை, லட்சார்ச்சனை; இரவு, சிறப்பு பூஜையும், 24ம் தேதி, மண்டல பூஜையன்று, காலை, கணபதி ஹோமம், அய்யப்ப ஸ்வாமிக்கு கலச அபிஷேகம்; மாலை, வீரமணி ராஜூ குழுவினரின், அய்யப்ப சுவாமி இன்னிசை கச்சேரி நடைபெறும். வரும், ஜன., 14ம் தேதி, காலை, அபிஷேகமும், மாலை, சுவாமி அய்யப்பன் மகர ஜோதி பூஜையும், அன்னதானமும் நடக்கிறது என, சபா நிர்வாகிகள் தெரிவித்தனர்.

பிரகாஷ் நகர்: பிரகாஷ் நகர் அய்யப்ப சுவாமி தேவஸ்தானத்தில், 39ம் ஆண்டு மண்டல பூஜை விழா, நேற்று துவங்கியது. நேற்று, சுவாமிக்கு ஆராட்டு விழா, மதியம், சதாசிவநகர் சாங்கி டேங்க் ஏரியில், சுவாமிக்கு புனித நீராட்டு, மாலை, மேள வாத்தியங்களுடன் புஷ்ப பல்லக்கில் வைத்து, தீப ஊர்வலம் நடத்தப்பட்டது. வரும், 25ம் தேதி, காலை, 7:00 மணியில் இருந்து, 12:00 மணி வரை, நெய் அபிஷேகம் நடக்கிறது. வரும், ஜன., 14ம் தேதி, மாலை, 6:30 மணிக்கு, மகர விளக்கு பூஜை மற்றும் பக்தி இன்னிசை நிகழ்ச்சி நடைபெறும் என, ஆலய நிர்வாகிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !