உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொங்கு சனீஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை!

பொங்கு சனீஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை!

திருத்துறைப்பூண்டி: திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர் கோவிலில், சனி பெயர்ச்சியையொட்டி, ஏராளமான பக்தர்கள், ஸ்வாமி தரிசனம் செய்தனர்.
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள திருக்கொள்ளிகாட்டில், திருஞானசம்மந்தர், திருநாவுக்கரசரால் பாடல் பெற்ற அக்னீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. மேற்கு நோக்கி, அமர்ந்த நிலையில், ஸ்வாமி அருள்பாலிக்கும் இந்த கோவிலில், சனீஸ்வர பகவான், கையில் கலப்பையுடன் பொங்கு சனீஸ்வரராக அருள்பாலித்து வருகிறார். நேற்று, துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு,
சனி பகவான் பிரவேசித்தார். இதையொட்டி, திருக்கொள்ளிகாட்டில் சறிப்பு வழிபாடு நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, ஸ்வாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !