ஸ்ரீரங்கம் கோவிலில் ஆணையர் ஆய்வு!
ADDED :4082 days ago
திருச்சி: திருச்சி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் நடைபெற்று வரும் திருப்பணிகளை, இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் தனபால், நேற்று காலை ஆய்வு செய்தார். தொடர்ந்து, வைகுண்ட ஏகாதசி திருவிழாவுக்கான முன்னேற்பாடுகள் குறித்து, கோவில் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பிறகு, அர்ச்சனை சீட்டுகளை கம்ப்யூட்டர் முறையில் வழங்கும் பணியை துவங்கி வைத்த கமிஷனர் தனபால், நிருபர்களிடம் கூறுகையில், ""பக்தர்கள் தங்குவதற்கு கட்டப்பட்டுள்ள யாத்திரி நிவாஸை, வைகுண்ட ஏகாதசிக்குள் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, என்றார். அப்போது, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் இணை ஆணையர் ஜெயராமன் உள்பட பலர் உடனிருந்தனர்.