கிறிஸ்துமஸ் விழா!
ADDED :4080 days ago
சேலம் : சேலம், அஸ்தம்பட்டியில் உள்ள சி.எஸ்.ஐ., பாலிடெக்னிக் கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.கோவை மண்டல பேராயர் தீமோத்திரவீந்தர் கலந்து கொண்டு பேசினார். கல்லூரி முதல்வர் கீதாகென்னடி தலைமை வகித்தார். கிறிஸ்துமஸையொட்டி, கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து வந்த நபர்கள், குழந்தைகளையும், பார்வையாளர்களையும் மகிழ்ச்சியடைய செய்தனர். இயேசுபிரான் பிறப்பு பற்றிய சிந்தனைகள் விளக்கப்பட்டது. கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்ற அனைவருக்கும், இனிப்பு வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை, சி.எஸ்.ஐ., பாலிடெக்னிக் கல்லூரி நிர்வாகம் செய்திருந்தது.