சத்தியில் அனுமன் ஜெயந்தி விழா!
சத்தியமங்கலம் : சத்தி, ஸ்ரீகருடஸ்தம்ப ஆஞ்சநேயர் கோவிலில், அனுமன் ஜெயந்தி விழா ஏற்பாடுகள் நடந்து வருகிறது.மார்கழி மூல நட்சத்திரமான, 21ம் தேதி, அனுமன் ஜெயந்தி விழா கொண்டாப்படுகிறது. சத்தியமங்கலம், மணிகூண்டு அருகே ஸ்ரீகருட ஸ்தம்ப ஆஞ்சநேயர் கோவிலில், சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அன்று காலை, 5 மணிக்கு பகவத் அனுக்ஞை, விஸ்வக்சேனர், ஆராதனை பூஜைகளும், 6 மணிக்கு மூலமந்திர ஜபம், மூலமந்திர ஹோமம், 7 மணிக்கு மஹா பூர்ணாஹூதி நடக்கிறது. 8 மணிக்கு உற்சவம், மூலவர் விஷேச திருமஞ்சனம், 10 மணிக்கு மஹா தீபாராதனை, தீர்த்த பிரசாதம் வழங்குதல், 10.30 மணிக்கு ஆஞ்சநேயருக்கு வெள்ளிகவசம் சாற்றுதல், 1,008 வடைமாலை சாற்றுதல், மதியம், 2 மணிக்கு ஆஞ்சநேயருக்கு, 1,008 வெற்றிலை மாலை சாற்றுதல், மாலை, 4 மணிக்கு மஹா அலங்காரம், முத்தங்கி சேவை நடக்கிறது.காலை, 11 மணி முதல் கோவிலில் பிரசாதம் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஏற்பாடுகளை, செயல் அலுவலர் அருள்குமார் தலைமையில் கோவில் குருக்கள் செய்து வருகிறார்.