பக்த ஆஞ்சநேயர் கோவிலில் மகா சுதர்சன யாகம்!
ADDED :3967 days ago
செஞ்சி: செஞ்சி தாலுகா நல்லாண் பிள்ளை பெற்றாள் பக்த ஆஞ்சநேயர் கோவிலில் மகா சுதர்சன யாகம் நடந்தது. அனுமன் ஜெயந்தி விழாவையொட்டி நேற்று காலை 7.00 மணிக்கு ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம், 8.00 மணிக்கு கலச பிரதிஷ்டை, 108 திரவியங்களை கொண்டு சுதர்சன யாகம், மகா பூர்ணாஹூதி நடந்தது. யாகத்தின் நிறைவாக கலச நீர் கொண்டு ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். சந்தனகாப்பு அலங்காரமும், வடைமாலை சாற்றி சிறப்பு தீபாராதனையும் நடந்தது. திருப்பாவை வாசிக கைங்கர்ய கோஷ்டியினரும், கிராம பொதுமக்களும் கலந்து கொண்டனர்.