அனுமார் கோவிலில் அமாவாசை அபிஷேகம்
ADDED :3957 days ago
தஞ்சாவூர்: ஹனுமந் ஜெயந்தி மற்றும் மார்கழி மாத அமாவாசையை முன்னிட்டு, தஞ்சை மேலவீதி, பிரதாப வீர ஆஞ்சநேயர் கோவிலில், சிறப்பு வழிபாடு நடந்தது. நேற்று காலை, 7.30 மணிக்கு லட்ச நாம ஜெபம், திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து ஆஞ்சநேயருக்கு திரவியப்பொடி, மஞ்சள், தேங்காய் துருவல், தேன், பால், தயிர் ஆகிய 6 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. மாலை சிறப்பு மலர் அலங்கார சேவையும், அமாவாசை வலம் வரும் நிகழ்ச்சியும், இரவு, ராஜவீதிகளில் ஸவாமி புறப்பாடு நடந்தது.