உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இளையான்குடியில் சிலைகளை திருடிய 4 பேர் கைது!

இளையான்குடியில் சிலைகளை திருடிய 4 பேர் கைது!

சாலைக்கிராமம்:இளையான்குடி அருகே கோயிலில் சிலை,பெட்டகத்தை திருடியதாக 4 பேரை போலீசார் கைது செய்து சிலைகளை மீட்டனர். சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகேயுள்ள சாத்தனுார் மகாசாத்தையா அய்யனார் கோயிலில் கடந்த அக்.,20 அன்று இரவு சிலை, மற்றும் பெட்டகத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர். சாலைக்கிராமம் போலீசார் விசாரித்து வந்தனர். இன்ஸ்பெக்டர் ரமேஷ், சிறப்பு எஸ்.ஐ., ராமசந்திரன் உட்பட தனிப்படை போலீசார் விசாரணையில், தேவகோட்டை வாடிநன்னீயூர் கிருஷ்ணன் மகன் கங்கேஸ்வரன், 34, ராமநாதபுரம் திருப்புனவாசல் அருகே பொட்டவயல் லுாசேஸ் மகன் பிரபு, 24, அறந்தாங்கி எல்.என்.புரம் அழகேசன் மகன் மகேஸ்வரன், 24, தேவகோட்டை வீலிமாத்துார் பொன்னுச்சாமி மகன் சுரேஷ்,27, ஆகிய நான்கு பேரும் பிடிபட்டனர்.

சிலை திருட்டு: நான்கு பேரும் சாத்தனுாரில் உள்ள 2 அடி உயர மகா சாத்தையா அய்யனார் சிலை,பெட்டகம் திருவாடானை அருகே கள்வேலிபொட்டல் சீனிவாசப் பெருமாள் கோயிலில் இருந்த சீதேவி, பூதேவி, பெருமாள், திருஞானசம்பந்தர், குபேர சிலைகள் ஆகிய 6 சிலைகளை திருடியதாக தெரிவித்தனர். திருடுபோன 7 சிலை, பெட்டகத்தையும் போலீசார் மீட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !