உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் பகல்பத்து துவக்கம்!

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் பகல்பத்து துவக்கம்!

திருவல்லிக்கேணி: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில், பகல் பத்து இராப்பத்து  திருவிழா, நேற்று கோலாகலமாக துவங்கியது. திருவல்லிக் கேணி பார்த்தசாரதி கோவிலில், நேற்று காலை,  கொடியேற்றத்துடன் திருமொழி திருநாள் பகல்பத்து துவங்கியது.

ஜன.,1ம் தேதி திருவாய்  மொழித்திருநாள் இராப்பத்து நிகழ்ச்சி  துவங்கி, 11ம் தேதி அன்று முடிகிறது. ஜன., 1ம் தேதி வைகுண்ட ஏகாதசியை  முன்னிட்டு, அதிகாலை 2.30  மணி முதல், மூலவர் தரிசனம் நடைபெறும். தொடர்ந்து, அதிகாலை 4:00 மணிக்கு, உற்சவர் உட்பிரகார  புறப்பாடு நடைபெறும்; 4:30 மணிக்கு,  பரமபத வாசலும் திறக்கப்பட உள்ளது. மாலை  5:00 மணிக்கு, திருவாய் மொழி மண்டபத்தில் பக்தி உலா நடைபெறும். தொடர்ந்து, இரவு 10:00  மணிக்கு, உற்சவர் அலங்கார திருமஞ்சனம்  நடைபெறும். நள்ளிரவு 12:00 மணிக்கு, பார்த்தசாரதி சுவாமி உற்சவர்  நம்மாழ்வாருடன், பெரியவீதி  புறப்பாடு நடைபெறவுள்ளது. விழா ஏற்பாடுகளை  கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !