உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருத்துறைப்பூண்டியில் அனுமந் ஜெயந்தி சிறப்பு வழிபாடு

திருத்துறைப்பூண்டியில் அனுமந் ஜெயந்தி சிறப்பு வழிபாடு

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டியில், அனுமந் ஜெயந்தியை முன்னிட்டு, 16 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயர், வெண்ணை காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். வில்வாரண்ய ஷேத்திரம் என்று அழைக்கப்படும், திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி முள்ளியாற்றின் வடகரையில், அருள் பாலித்து வரும் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜப்பெருமாள் கோவிலில், வைராக்ய ஆஞ்சநேயர் அருள்பாலித்து வருகிறார். அனுமத் ஜெயந்தியை முன்னிட்டு, 16 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு காலை, 9 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பகல், 1 மணிக்கு வெண்ணை காப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.

* திருத்துறைப்பூண்டி நகரில் அருள்பாலித்து வரும் ராமர் கோவிலில் பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு காலையில், 10 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மதியம் வெண்ணெய் காப்பு அலங்காரம் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !