தீவனூரில் திருவோண தீபம்
ADDED :3947 days ago
திண்டிவனம்; திண்டிவனம் அடுத்த தீவனூர் லட்சுமிநாராயண பெருமாள் கோவிலில் வரும் 25ம் தேதி திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு திருவோண தீபம் ஏற்றப்படுகிறது. காலை 8 மணிக்கு மூலவர் மற்றும் உற்சவர் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடக்கிறது. வெள்ளிக்கவச அலங்காரத்தில் மூலவர் பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். மாலை 6 மணிக்கு கோவில் வளாகத்தில் உள்ள கொடி கம்பத்தில் திவோண தீபம் ஏற்றப்படுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை தர்மகர்த்தா நாமக்கார முனுசாமி செய்து வருகிறார்.