அக்னி தீர்த்த கடலில் மலரஞ்சலி!
ADDED :3947 days ago
ராமேஸ்வரம் : தனுஷ்கோடியில் 1964 ல் வீசிய புயல் தாக்கியதில் ஆயிரத்து மேலானவர்கள் இறந்தனர். ரயில்வே ஸ்டேஷன், கோயில்கள், சர்ச், தபால் நிலையம், பள்ளி கட்டடங்கள் சின்னா பின்னமாகி, நினைவு சின்னங்களாக காட்சி அளிக்கின்றது. தேசிய பேரிழப்பாக மத்திய அரசால் அறிவிக்கப் பட்ட இதன் 50ம் ஆண்டு நினைவு தினத்தை யொட்டி, நேற்று மாலை ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் மார்க்சிஸ்ட் கட்சியினர் தாலுகா செயலாளர் செந்தில் தலைமையில் தீபம் ஏற்றி, மலரஞ்சலி செலுத்தினர். இதில் சி.ஐ.டி.யு., மீனவ தொழிலாளர் சங்க நிர்வாகிகள் என்.பி. செந்தில், சுடலைகாசி, கருணாமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.