அனுமத் ஜெயந்தி விரதம்!
ADDED :4340 days ago
மார்கழி அமாவாசையும், மூலநட்சத்திரமும் கூடிய நாளில் அனுமன் அவதரித்தார்.இந்நாளில் விரதம் மேற்கொள்பவர்கள்மதியம் மட்டும் சாப்பிடலாம். காலைஉணவைத் தவிர்க்க முடியாதவர்கள் பால், பழம் சாப்பிடலாம். பகல் முழுவதும்ஸ்ரீராமஜெயம் மந்திரத்தை ஜெபிக்க வேண்டும். ராமநாமம் எழுதுபவர்கள் 108 அல்லது 1008 முறை எழுதலாம். பூஜைஅறையில் விளக்கேற்றி, ஆஞ்சநேயர் படத்துக்கு வடைமாலை சாத்தி, அவல், பொரி, கல்கண்டு படைத்து வழிபடவேண்டும். ஆஞ்சநேயர் கவசம், சுந்தரகாண்டம் பாராயணம் செய்ய வேண்டும். மாலையில் கோயிலுக்குச் சென்றுஅனுமனுக்கு துளசி, வெற்றிலை அல்லது வடைமாலை அணிவிக்க வேண்டும். வெண்ணெய் சாத்த வேண்டும்.