உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பதி 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட்: இணையதள முன்பதிவு!

திருப்பதி 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட்: இணையதள முன்பதிவு!

திருப்பதி: வைகுண்ட துவாதசிக்கு, ஏழுமலையானை தரிசிக்க, 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட்டை, தேவஸ்தானம்,  இணையதளத்தில்  இன்று  வெளியிட உள்ளது. வைகுண்ட ஏகாதசிக்கு மறுநாள் வரும் துவாதசி தினத்தன்று, ஏழுமலையான்  தரிசனத்திற்காக, இன்று காலை, 9:00 மணி முதல்,  300 ரூபாய் கட்டணம்  கொண்ட, 10 ஆயிரம் தரிசன டிக்கெட்டை இணையதளத்தில் வெளியிட, தேவஸ்தான அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.  இந்த டிக்கெட் பெற்ற பக்தர்கள், ஜன., 2ம் தேதி,  ஏழுமலையானை தரிசிக்க, சொர்க்க வாசல் வழியாக செல்லும் வாய்ப்பு  வழங்கப்படும். ஜன., 1, 2  ஆகிய நாட்களில், பக்தர்கள் வருகை அதிகம்  இருக்கும் என்பதால், இம்மாதம், 29ம் தேதி நள்ளிரவு முதல் ஜன., 2ம் தேதி  நள்ளிரவு வரை, பாத ய õத்திரை பக்தர்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டு உள்ளது. மேலும், நாடு முழுவதும் உள்ள, இ – தர்ஷன் மையங்களில், இம்மாதம் 30ம் தேதி  முதல்  ஜன., 2ம் தேதி வரை, முன்பதிவு ரத்து  செய்யப்பட்டுள்ளது. பரிந்துரை கடிதங்களுக்கான அனுமதி ரத்து  செய்யப்பட்டு உள்ளது. இந்த நாட்களில்,  திருமலையில், தர்ம தரிசனத்தில் மட்டுமே  பக்தர்கள்  அனுமதிக்கப்பட இருக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !