மதுரையில் டிச. 28ல் இரட்டை திருக்கல்யாணம்
ADDED :3947 days ago
மதுரை: ஸ்ரீ ஹரிஹர சேவா டிரஸ்ட் மற்றும் நெரூர் ஸ்ரீவித்யா நரசிம்ம ஆஸ்ரமம் இணைந்து நடத்தும் திருக்கல்யாண உற்ஸவம் மதுரை லட்சுமி சுந்தரம் ஹாலில் டிச.,28ல் நடக்கிறது. சாலங்க்ருத பாணிக்ரஹண மகோத்ஸவம் என்னும் இந்த விழாவில் மீனாட்சி- சுந்தரேஸ்வரர், செஞ்சுலட்சுமி தாயார்- நரசிம்மர் ஆகியோருக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. காலை 10 மணிக்கு நடக்கும் திருக்கல்யாணத்திற்கு நெரூர் வித்யா சங்கர சரஸ்வதி சுவாமி முன்னிலை வகிக்கிறார். மாலை 5 மணிக்கு ஓ.ஆர்.கண்ணன் குழுவினரின் பஜனையும், 6 மணிக்கு விஷ்ணு, லலிதா சகஸ்ர நாம பாராயணமும், இரவு 7 மணிக்கு சுவாமியின் அருளுரையும் நடக்கிறது. பங்கேற்க விரும்புவோர் 95973 62233ல் தொடர்பு கொள்ளலாம்.