உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாமக்கல்லில் டிச., 27 சலங்கை பூஜை விழா

நாமக்கல்லில் டிச., 27 சலங்கை பூஜை விழா

நாமக்கல் : நாமக்கல், ஸ்ரீ மஹாலில் விமலாசத்யா பரத நாட்டியாலயா சார்பில், வரும், 27ம் தேதி சலங்கை பூஜை விழா நடக்கிறது. நாமக்கல், விமலாசத்யா பரத நாட்டியாலயா சார்பில், நாமக்கல்-திருச்சி சாலையில் உள்ள ஸ்ரீ மஹாலில், வரும், 27ம் தேதி, மாலை, 5.30 மணிக்கு, பரத நாட்டிய சிறுமிகள் யாழினி மற்றும் இளநகை ஆகியோரின் சலங்கை பூஜை விழா நடக்கிறது. ராசிபுரம் பாவை கல்வி நிறுவன தாளாளர் மங்கையர்கரசி தலைமை வகிக்கிறார்.தமிழ்நாடு அரசு இசைப்பள்ளியின், ஈரோடு பள்ளி தலைமையாசிரியர் சத்யமூர்த்தி, நாமக்கல் மாவட்ட ஜவகர் பால்பவன் திட்ட அலுவலர் தில்லை சிவக்குமார், சேலம் அரசு இசைப்பள்ளி தவில் வித்வான் மணிகண்டன், நாமக்கல் ஸ்ரீ ஆதியின் விமலாசத்யா பரத நாட்டியாலயா செயலாளர் விமலாசத்யா உள்பட பலர் பங்கேற்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !