ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா: சிறப்பு அலங்காரத்தில் ரெங்கநாதர்!
ADDED :3951 days ago
ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு பகல்பத்து உற்சவம் துவங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. நடந்து வரும் வைகுண்ட ஏகாதசி பகல் பத்து உற்சவத்தின் நான்காம் நாளான நேற்று கவரின்மான் கொண்டை, நெல்லிக்காய்மாலை, ரத்தனலட்சுமி பதக்கம், பஞ்சாயதமாலை, முத்துசரம், வைர அவயஹஸ்தம் உள்ளிட்ட ஆபரணங்களுடன் நம்பெருமாள் அர்ச்சுனா மண்டபத்துக்கு எழுந்தளிரு சேவை சாதித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.