வன்னிய பெருமாள் கோவிலில் ஆஞ்சநேயர் வீதியுலா!
ADDED :3951 days ago
புதுச்சேரி: வன்னிய பெருமாள் கோவிலில் அனுமன் ஜெயந்தி உற்சவத்தை முன்னிட்டு, சுவாமி வீதியுலா நடந்தது. முதலியார்பேட்டையில் உள்ள வன்னியப் பெருமாள் கோவிலில் அனுமன் ஜெயந்தி உற்சவம் மற்றும் ஆண்டு தீபத்திருவிழா கடந்த 21ம் தேதி துவங்கியது.அன்று மாலை 6.௦௦ மணிக்கு ஆஞ்சநேயருக்கு, சிறப்பு திருமஞ்சனம், சிறப்பு அலங்காரம் நடந்தது. நேற்று முன்தினம் மாலை 6.௦௦ மணிக்கு 1008 வடைமாலை சாற்றுதல், இரவு 7.௦௦ மணிக்கு ஆஞ்சநேயர் வீதியுலா, திவ்யநாம சங்கீர்த்தனம் நடந்தது. ஏற்பாடுகளை தனி அதிகாரி செய்திருந்தார்.