அம்மன் கண் திறப்பு? பக்தர்கள் பரவசம்!
ADDED :4033 days ago
திருவண்ணாமலை: ஆரணி அருகே அம்மன் கண் திறந்ததாக, பக்தர்கள் பரவசமடைந்து வழிபட்டுச் சென்றனர். ஆரணி அடுத்த சேவூர் பெருமாள் கோவில் வளாகத்தில், பஜனை கோவில் உள்ளது. இங்கு, மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் இயங்கி வருகிறது. இங்கு, நேற்று முன்தினம் இரவு, சிறப்பு வேள்வி பூஜை நடந்தது. அப்போது, அம்மனை வழிபட வந்த பக்தர் ஒருவர், கோவிலில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த படத்தில் உள்ள ஆதிபராசக்தி அம்மன் கண் திறந்து பார்த்ததாக கூறினார். இதனால், அங்கிருந்த பக்தர்கள், அம்மனுக்கு சிறப்பு வழிபாடு செய்தனர்.