உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேலூரில் ஏகாதச ருத்ராபிஷேக விழா

வேலூரில் ஏகாதச ருத்ராபிஷேக விழா

வேலூர்: வேலூர் திருமலைக்கோடி ஓம் சக்தி நாராயணி பீடம் சக்தி அம்மாவின், 39வது ஜெயந்தியை முன்னிட்டு, வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவிலில், மஹன்யாச ஏகாதச ருத்ராபிஷேக விழா, நேற்று நடந்தது. இதையொட்டி, ஏகாதச ருத்ரஹோமமும், ஏகாதச ருத்ராபிஷேகமும் நடந்தது. இதில் சக்தி அம்மா, ரத்தினகிரி பாலமுருகனடிமை ஸ்வாமிகள், கலவை சச்சிதானந்த ஸ்வாமிகள், தர்மபுரா ஆதின கட்டளை ஸ்வாமிகள் முத்துக்குமார ஸ்வாமி தம்பிரான், வாலாஜா பேட்டை தன்வந்திரி பீடம் முரளிதர ஸ்வாமிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில், விக்னேஸ்வர பூஜை, கலச பூஜை, ஏகாதச ருத்ர பாராயணம், ஏகாதச ருத்ர ஹோமம், ருத்ர திரிசதி அர்ச்சனை, மகா தீபாராதனை நடந்தது. திருமலைக்கோடி நாராயணி பீடம், ஜலகண்டேஸ்வரர் தரும ஸ்தாபனம் இதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !