சபரிமலை தேசிய புனித தலமாகுமா?
ADDED :4024 days ago
சபரிமலை:சுவாமி அய்யப்பன் எழுந்தருளியுள்ள சபரிமலையை, தேசிய புனித தலமாக அறிவிக்கக் கோரி, அக்கோவிலை நிர்வகிக்கும் திருவாங்கூர் தேவசம் வாரியம், பிரதமர் மோடிக்கு வேண்டு கோள் விடுத்துள்ளது. இதுகுறித்து வாரியம் வெளியிட்ட அறிக்கை விவரம்:சபரிமலையை தேசிய புனித தலமாக அறிவிக்க வேண்டும் என, பிரதமர் நரேந்திர மோடியிடம் தனிப்பட்ட முறையில், ஏற்கனவே தேவசம் கேட்டுக் கொண்டுள்ளது.இதுகுறித்து, வரும் ஜனவரி 31ம் தேதி, திருவனந்தபுரத்தில், 35வது தேசிய விளையாட்டு போட்டியை துவக்க வரும் பிரதமரிடம், நேரில் வலியுறுத்தப்படும். சபரிமலையின் அபிவிருத்திக்காக, 2,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டம் உருவாக்கப்பட்டு, மத்திய அரசிடம் அளிக்கப்பட்டுள்ளது. முதற்கட்ட பணிகளுக்கு, 500 கோடி ரூபாய் ஒதுக்க கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.