தி.நகரில் தர்ம சாஸ்தா திருக்கல்யாண விழா
ADDED :4018 days ago
தி.நகர்: தி.நகரில், வரும் ௨௮ம் தேதி, தர்ம சாஸ்தா திருக்கல்யாண விழா நடக்க உள்ளது. தி.நகர் வடக்கு போக் ரோடு, நரசிம்மா ரோடு, ௨வது தெரு காந்திமதி திருமண மண்டபத்தில், பூர்ணா புஷ்களாம்பாள் சமேத தர்ம சாஸ்தா திருக்கல்யாண விழா, வரும் 27ம் தேதி துவங்குகிறது. அன்று காலை 6:00 மணிக்கு, மகா கணபதி ஹோமம், வடுக பூஜை, குருபூஜையும், காலை 8:30 மணிக்கு, லட்சார்ச்சனையும், மதியம் 12:30 மணிக்கு மகாதீபாராதனையும், அன்னதானமும் நடக்க உள்ளன. மதியம் 3:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கின்றன. வரும் 27ம் தேதியன்று, காலை 7:00 மணிக்கு, சம்ப்ரதாய உஞ்சவிருத்தியும், காலை 10:30 முதல் 12:00 மணிக்குள், பாகவத சம்பிரதாயப்படி, திருக்கல்யாணமும் நடக்க உள்ளன.