உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அனுமன் ஜெயந்தி விழா!

அனுமன் ஜெயந்தி விழா!

விழுப்புரம்: விழுப்புரம் வண்டிமேடு கே.வி.ஆர்., நகரில் அமைந்துள்ள அபிநவ மந்த்ராலயத்தில் அனுமன் ஜெயந்தி விழா நடந்தது. விழாவையொட்டி காலை 7:00 மணிக்கு ராக வேந்திரர், ஆஞ்சநேயர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. தொடர்ந்து 8:00 மணிக்கு தீபாராதனை, மாலை 6:00 மணிக்கு ஆஞ்சநேயருக்கு 108 வெள்ளி வெற்றிலை மாலை சாற்றப்பட்டு, வடமாலை மற்றும் வெண்ணை காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பெண்கள் 501 விளக்குகள் மூலம் கோவில் வளா கத்தில் அனுமன் ஜெயந்தி வார்த்தை வடிவமைத்து வைத்தனர். ஏற்பாடுகளை ராகவேந்திரர் அறக்கட்டளை நிர்வாகிககள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !