தாயமங்கலம் கோயிலில் கோபுரம் இடிக்கும் பணி துவங்கியது!
ADDED :3936 days ago
இளையான்குடி : தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் புதிய ராஜகோபுரம் கட்டுவதற்காக பழைய ராஜகோபுரம் இடிக்கும் பணி துவங்கியது.தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர் .
ஒவ்வொரு ஆண்டும் பங்குனியில் நடக்கும் திருவிழாவிற்கு பல பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து செல்வர். பிரசித்தி பெற்ற இக்கோயிலில் மூன்று நிலை ராஜகோபுரம் உள்ளது. இதை அகற்றி விட்டு , புதிய ராஜகோபுரம் கட்ட வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர் .
புதிய ஏழு நிலை ராஜகோபுரம் கட்டுவதற்கு 2010ல் அடிக்கல் நாட்டப்பட்டது. தற்போது புதிய ஏழு நிலை ராஜகோபுரம் கட்டுவதற்கு வசதியாக , பழைய மூன்று நிலை ராஜகோபுரத்தை இடிக்கும் பணி துவங்கியுள்ளது.