ராமேஸ்வரம் கோயிலில் மாணிக்கவாசகர் வீதி உலா!
ராமேஸ்வரம் : ஆருத்ரா தரிசனத்தையொட்டி, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் தங்க கேடயத்தில் மாணிக்க வாசகர் எழுந்தருளி வீதி உலா வந்தார்.
ஜன., 5ம் தேதி, ராமேஸ்வரம் கோயிலில் ஆருத்ரா தரிசனம் யொட்டி, நேற்று முன்தினம் கோயிலில் காப்பு கட்டி விழா துவங்கியது. நேற்று காலை கோயிலுக்குள் உள்ள நாயக்கர் வாசலில் எழுந்தருளிய சுவாமி, அம்மன் மற்றும் பஞ்சமூர்த்திக்கு மகா தீபாராதனை நடந்தது. இதனையடுத்து, தங்க கேடயத்தில் மாணிக்கவாசகர் எழுந்தருளி, கோயில் மூன்றாம் பிரகாரத்தில் வீதி உலா வந்தார்.
கோயில் நடை திறப்பில் மாற்றம் : ஜன., 5ம் தேதி, கோயிலில் அதிகாலை 2 மணிக்கு நடை திறந்து, 2.30 முதல் 3.30 மணி வரை ஸ்டிபலிங்க தரிசனமும், அதனை தொடர்ந்து மாணிக்கவாசர் புறப்பாடாகி, அதிகாலை 5.15 மணிக்கு நடராஜர் சன்னதியில் ஆருத்ரா தரிசனம் சிறப்பு தீபாராதனை நடைபெறும் என, கோயில் இணை கமிஷனர் செல்வராஜ் தெரிவித்தார்.