உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருச்சி திருவிளக்கு பூஜை!

திருச்சி திருவிளக்கு பூஜை!

திருச்சி: துறையூர் ஓங்கார குடில் அகத்தியர் சுத்த சன்மார்க்க சங்கம் சார்பில், திருமண தடை
நீங்கவும், புத்திர பாக்கியம் கிடைக்கவும், குடும்ப ஒற்றுமை நிலவவும், தீராத நோய் மற்றும் கடன் தொல்லையில் இருந்து விடுபடவும், திருச்சி ஜோசப் கல்லூரியில் திருவிளக்கு பூஜை நடந்தது.

ஒங்கார குடில் ஆறுமுக அரங்க மகாதேசிக ஸ்வாமிகள் குத்து விளக்கேற்றி பூஜையை துவக்கி வைத்தார். இதில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று விளக்குகளை ஏற்றி வைத்து
ஸ்வாமி வழிப்பட்டனர். பூஜையில் பங்கேற்ற வர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !