ஐயப்பன் கோவில் மண்டல பூஜை!
ADDED :4141 days ago
குன்னூர் : குன்னூர் ஐயப்பன் கோவிலில், மண்டல பூஜை நடந்தது.குன்னூர் ஐயப்ப பக்த சங்கம் சார்பில், ஐயப்பன் கோவிலில், 48வது ஆண்டு மண்டல பூஜை அதிகாலை, 5:00 மணிக்கு கணபதிஹோமத்துடன் துவங்கியது. அன்னதானம், பஜனை, ராக்கால பூஜை நடந்தன. மவுன்ட்ரோடு டாக்சி ஸ்டாண்ட் அருகே, நகராட்சி சார்பில் இன்னிசை கச்சேரி நிகழ்ச்சி நடந்தது.நேற்று முன்தினம் காலை, 10:15 மணிக்கு துர்கையம்மன் கோவிலில் இருந்து தீர்த்தகுட ஊர்வலம், சிறப்பு அபிஷேகம், மாலை, 4:35 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட பாலக்கொம்பு ரதத்தில் ஐயப்பன் திருவீதி உலா நடந்தது.
இந்த ஊர்வலம், கோவிலில் துவங்கி பஸ் ஸ்டாண்ட், தீயணைப்பு நிலையம், டி.டி.கே., சாலை, வி.பி., தெரு வழியாக மீண்டும் கோவிலை அடைந்தது. தொடர்ந்து புஷ்பாஞ்சலி நடந்தது. விழா ஏற்பாடுகளை ஐயப்பன் பக்த சங்கத்தினர் செய்திருந்தனர்.