திருவாசகம் முற்றோதல்!
ADDED :3935 days ago
கீழக்கரை : உத்திரகோசமங்கை மங்களநாதசுவாமி கோயிலில் நேற்று திருவானைக்காவல் சிவனடியார் குழுவினர் மேள தாளம் முழங்க சிவபுராணம் பாடிக்கொண்டு நான்கு ரதவீதகளில் உலா வந்தனர்.
திருவாசக முற்றோதல் விழாவில் திருக்கழுக்குன்றம் சதாசிவபரபிரம்ம தமோதரன் தலைமை தாங்கினார். சிவநாம அர்ச்சனையில் 5000 க்கும் மேற்பட்ட சிவனடியார் தொண்டர்கள் கலந்துகொண்டனர். மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், பின்னர் ஆன்மிக சொற்பொழிவும் நடந்தது.