வடசிறுவளூரில் உரூஸ் திருவிழா!
ADDED :3934 days ago
சங்கராபுரம்: சங்கராபுரம் வட்டம், வடசிறுவளூர் தர்காவில் உரூஸ் திருவிழா நடந்தது. வடசிறுவளூரில் உள்ள பழமையான தர்காவில், ஆண்டுதோறும் உரூஸ் திரு விழா விமரிசையாக நடப்பது வழக்கம்.
இந்தாண்டு திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. பின்னர் முக்கிய நிகழ்வான சந்தன கூடு ஊர்வலம் நடந்தது. இதில் திரளான இஸ்லாமியர்கள் கலந்துக் கொண்டனர். தொடர்ந்து தர்காவில் சிறப்பு பிரார்த்னை நடந்தது. பின்னர், பொதுமக்களுக்கு விருந்து உபசரிப்பு நடந்தது.