தொடர் சொற்பொழிவு!
துறையூர்: துறையூர் ஓங்காரக்குடிலில் உள்ள அகத்தியர் சன்மார்க்க சங்கத்தில், நிறுவனர் ஆறுமுக அரங்க மகாதேசிகர், 80வது அவதார தின விழாவை முன்னிட்டு, நேற்று முதல், தொடர் சொற்பொழிவு துவங்கியது.
திருச்சி மாவட்டம், துறையூர் அகத்தியர் சன்மார்க்க சங்கத்தில், நிறுவனர் முருகபெருமான் மற்றும் அகத்தியர், ராமலிங்க சுவாமிகள் உள்ளிட்ட சித்தர்களின் புகழ் பரப்பி வருகிறார். இவரது, 80வது அவதார தினம், ஜனவரி, 13ம் தேதி கொண்டாடப்படுகிறது. அதையொட்டி, நேற்று தொடர் சொற்பொழிவு துவங்கியது.
தொடர்ந்து, 13 நாட்களுக்கு பட்டினத்தார், நந்தனார், சேக்கிழார் சுந்தரனார், அருணகிரிநாதர், மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், ராமலிங்க அடிகள், திருமூலர் ஆகிய மகான்களை பற்றி சென்னை செல்வகணபதி, சேலம் ருக்மணி, சென்னை சாரதா நம்பியாரூரன், திருச்சி விஜயசுந்தரி, புவனகிரி அன்பழகன், நாகர்கோவில் ராசாராம், சென்னை ராமலிங்கம், மயிலாடுதுறை சிவச்சந்திரன், சேலம் ராமன், திருச்சி அறிவொளி ஆகியோர் சொற்பொழிவாற்றுகின்றனர். அதே போல், 4 மற்றும், 13 ஆகிய தேதிகளில், பவுர்ணமி, அவதார தின விழா நடக்கும்.