புத்தாண்டு வழிபாடு!
ADDED :3991 days ago
வேதாரண்யம்: வேதாரண்யம், வேதாரண்யேஸ்வரர் கோவில், நாகை ரஸ்தா காசி விஸ்வநாதர் கோவில்களில், ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் ஸ்வாமி தரிசனம் செய்தனர் வேதாரண்யம் அடுத்த கடினல்வயல் கிராமத்தில் உள்ள மாதா தேவாலயம் தாணிக்கோட்டகம், கோடியக்கரை, கரியாப்பட்டிணம் செம்போடை, அகஸ்தியன்பள்ளி ஆகிய இடங்களில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில், புத்தாண்டை முன்னிட்டு, சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில், ஏராளமான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டு வாழ்த்துக்களையும், இனிப்புகளையும் பரிமாறிக் கொண்டனர்.