உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆஞ்சநேயர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா

ஆஞ்சநேயர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா

திருச்சி: திருச்சி பாரதிதாசன் சாலையில் உள்ள சஞ்சீவி ஆஞ்சநேய ஸ்வாமி திருக்கோவிலில், வைகுண்ட ஏகாதசி பெருவிழா நடந்தது.பிரசித்தி பெற்ற ஆஞ்சநேய ஸ்வாமி கோவிலில், நேற்று முன் தினம் காலை, 6 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, சிறப்பு திருமஞ்சனமும், மாலை, 5 மணிக்கு ஸ்ரீ சஞ்சீவி ஆஞ்சநேய ஸ்வாமிக்கு சிறப்பு சந்தன காப்பு அலங்காரம் நடந்தது.இரவு, 8 மணிக்கு, ஸ்ரீரங்கம் ஆயிரங்கால் மண்டபத்தில் நம் பெருமாள் முன்னிலையில் நாமாவளி பஜனை நடந்தது. நேற்று காலை, 5 மணிக்கு சிறப்பு பூஜை மற்றும் மகாதீபராதனை நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !