முன்னூர் கோவிலில் பிரதோஷ வழிபாடு!
ADDED :3935 days ago
முருக்கேரி: முருக்கேரி அடுத்த முன்னூர், பெருமுக்கல் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது. மரக்காணம் ஒன்றியம் முன்னூர் ஆடவல்லீஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பெருமானுக்கு சந்தனகாப்பு, அபிஷேகம், பாலாபிஷேகம் நடந்தது. பெருமுக்கல் மலை முத்தியாஜலஈஸ்வரர் கோவிலில் சிவலிங்கத்திற்கு பாலாபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்து தீபாரதனை நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.