உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்!

நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்!

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் இன்று சிவன் கோவில்களில் ஆருத்ரா தரிசனம் நடைபெறுகிறது. நேற்று அனைத்து கோவில்களிலும், நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது.

மார்கழி திருவாதிரை அன்று, சிவன் கோவில்களில் ஆருத்ரா தரிசனம் நடைபெறும். காஞ்சிபுரத்தில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் உற்சவர் அலங்கரிக்கப்பட்டு, ராஜவீதிகளில் வலம் வருவர். காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில், இந்த விழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். நேற்று இரவு 9:00 மணியளவில், உற்சவர் நடராஜருக்கு அபிஷேகம் துவங்கியது. பால், தயிர், சந்தனம், இளநீர், பச்சரிசி மாவு, மஞ்சள், பழவகைகள், விபூதி போன்றவற்றால்

நள்ளிரவு வரை நடந்தது. அதனை தொடர்ந்து, நடராஜருக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது.
ஏராளமான பக்தர்கள், கடும் பனியையும் பொருட்படுத்தாமல், தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !