உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மூலநாதர் சுவாமி கோவிலில் ஆருத்ரா தரிசனம்

மூலநாதர் சுவாமி கோவிலில் ஆருத்ரா தரிசனம்

பாகூர்: பாகூர் மூலநாதர் சுவாமி கோவிலில், ஆருத்ரா தரிசன வழிபாடு நடந்தது. காலை 4.00 மணிக்கு, விநாயகர், மூலநாதர், வேதாம்பிகையம்மன், முருகர், சண்டிகேஸ்வரர் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகமும் நடந்தது. 5.00 மணிக்கு கலச ஸ்தாபனம் சிறப்பு ஹோமம், 9.00 மணிக்கு சிவகாம சுந்தரி சமேத மாணிக்க நடராஜர் பெருமானுக்கு, ஆருத்ரா தரிசன வழிபாடு நடந்தது. இதில், திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழுவினர், அர்ச்சகர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !