உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாதாளகாளியம்மன் கோயிலில் பவுர்ணமி விளக்கு பூஜை!

பாதாளகாளியம்மன் கோயிலில் பவுர்ணமி விளக்கு பூஜை!

சாயல்குடி : சாயல்குடி அருகே காணிக்கூரில் உள்ள பாதாளகாளியம்மன் கோயிலில் பவுர்ணமி தின விளக்கு பூஜை நடந்தது. அம்மனுக்கு பஞ்சாமிர்தம், பால், இளநீர் அபிஷேகங்கள் நடந்தன. அம்மன், தங்க கவசத்தால் அலங்கரிக்கப்பட்டு தீப ஆராதனை நடந்தது. பெண்கள் விளக்கேற்றி, வழிபட்டனர். இது போல், கூராங்கோட்டை தர்ம முனீஸ்வரர், பிள்ளையார்குளம் பனையூர் அம்மன், வி. வி. ஆர்., நகர் பத்திரகாளியம்மன் கோயில்களிலும் பவுர்ணமி தின விளக்கு பூஜைகள் நடந்தன. ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !